ADVERTISEMENT

மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி... ராமதாஸ் வரவேற்று ட்வீட்..!

02:58 PM Oct 08, 2020 | rajavel

ADVERTISEMENT

கரோனா பரவலைத் தடுப்பது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை எழுப்பியுள்ள கேள்வியை வரவேற்றுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைக்காதவர்களுக்கு கண்டிப்பாக பாடம் புகட்டப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''முகக்கவசம் அணியாதவர்களை ஏன் கைது செய்யக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அது நல்ல கேள்வி. அருமையான யோசனை. கரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைக்காதவர்களுக்கு கண்டிப்பாக பாடம் புகட்டப்பட வேண்டும்!

கரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணியும்படி உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பிரதமரும், முதல்வரும் கூறுகின்றனர். விழிப்புணர்வு விளம்பரங்கள் வெளியாகின்றன. நானும் அறிவுறுத்தி வருகிறேன். இவ்வளவுக்கு பிறகும் திருந்தாமல் செயல்படுவது குற்றம் அல்லவா?

சென்னையில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 90% மக்கள் முக்கவசம் அணிவதில்லை என்று ஆணையரே கூறுகிறார். அதன்பிறகும் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதில் என்ன தயக்கம்? விதிகளை மதிக்காமல் கரோனாவை பரப்புவோர் மீது கருணை காட்டக்கூடாது!'' இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT