Advertisment

3000 பேருக்கு நிவாரண உதவி பொருட்கள்! ஐ.பி.எஸ்.வழங்கினார்!

dindigul

Advertisment

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், கரோனா வைரஸ் பாதிப்பு நிவாரண பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் வரும் மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அனைத்து தொழிலாளர்களும் வேலை இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு பல்வேறு அமைப்பினர் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

அதனடிப்படையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில், திண்டுக்கல் ஒன்றியம் சீலப்பாடி ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களான அரிசி, பருப்பு, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், சாம்பார் பொடி உட்பட மளிகை பொருட்கள் பைகளை கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான இ.பெ. செந்தில்குமார் வழங்கினார்.

இதில் ரங்கநாதபுரம், ஈபி காலனி, நந்தவனப்பட்டி, என்.எஸ் நகர், ஜி. எஸ் நகர் உள்ளிட்ட சீலப்பாடி ஊராட் சிக்குட்பட்ட 3,000 பேருக்கு இந்த நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் சீலப்பாடி அங்கன்வாடிக்கு டேபிள் ,சேர், குழந்தைகளுக்கான சேர், பீரோ ஆகிய பொருட்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் ஒன்றிய குழு தலைவர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசன், சீலப்பாடி ஊராட்சி தலைவர் மீனாட்சி மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

corona virus dindigul help
இதையும் படியுங்கள்
Subscribe