corona

திருச்சி ஆவின் சேர்மேன் கார்த்திகேயன். அ.தி.மு.க. மாவட்ட மாணவரணிச் செயலாளராகவும் உள்ளார். இவருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிரபல தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில் தற்போது சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இவரது குடும்பத்தினருக்கும் கரோனா தொற்று இருக்கிறதாக என பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்கும் கரோனா தொற்று இருப்பது அறியப்பட்டதையடுத்து அவர்களும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் முதலமைச்சர் திருச்சிக்குச் சென்றபோதும், அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் ஆவின் சேர்மேன் கார்த்திகேயன். இவருக்குக் கரோனா தொற்று இருப்பதை அறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது சிகிச்சை அளிக்கப்படும் விதம் குறித்து கேட்டறிந்துள்ளார்.

Advertisment

-மகேஷ்