ADVERTISEMENT

''இதுவே தமிழகத்தில் கரோனா சமூகத் தொற்றாகப் பரவியுள்ளதற்குக் காரணம்...'' -ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

01:23 PM Jul 24, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜூலை 22ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. அப்போது அவர், மரணத்திலும் கூட அ.தி.மு.க. அரசு ஊழல் செய்திருக்கிறது. 444 பேர் மரணத்தை மறைத்ததற்கு முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும்.

கரோனா பாதிப்புகளையும், மரணங்களையும் மறைத்ததே தமிழகத்தில் கரோனா பரவுவதற்கு காரணம். இதற்காக அ.தி.மு.க. அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ஒவ்வொரு மாவட்ட வாரியாக உயிரிழப்பு அறிக்கை பட்டியலை வெளியிட வேண்டும்.

கரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு ஐ.சி.எம்.ஆர். நிறுவனம் வழிமுறைகளை வகுத்துள்ளது. அப்படியிருக்கும் பட்சத்தில் அந்த 444 பேர் உடல்கள் எவ்வாறு அப்புறப்படுத்தி அடக்கம் செய்யப்பட்டது என்பதை அரசு விளக்க வேண்டும்.

அ.தி.மு.க. அரசால் மறைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட இந்த 444 பேர்களின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளின்போது ஒரு மறைவுக்கு அவரது உற்றார், உறவினர்கள் எனும் வகையில் குறைந்தபட்சம் 20 பேர் வந்திருந்தால்கூட 444 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஏறத்தாழ 8,880 பேராவது பங்கேற்றிருப்பார்கள்.

கரோனா மரணத்தின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய எந்த விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் இந்த மரணங்களில் கடைப்பிடிக்கப்படாததால் இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 8,800க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் எங்கெங்கு சென்றார்களோ, அங்கெல்லாம் அவர்கள் கரோனாவைப் பரப்பியிருக்கிறார்கள். இதுவே தமிழகத்தில் இன்றைக்கு கரோனா ஒரு சமூகத் தொற்றாகப் பரவியுள்ளதற்குக் காரணம் என நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். இவ்வாறு கூறினார்.

இந்தப் பேட்டியின்போது சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., டாக்டர் கலாநிதி வீராசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT