Advertisment

கரோனா நிவாரணத்திற்கு கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் ஒரு மாத சம்பளம்! டி.ராஜா அறிவிப்பு!

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு 21 நாட்களில் இன்று நான்காம் நாள். இந்நிலையில் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஐம்பது லட்சம், ஒரு கோடி என அறிவித்துள்ளார்கள். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி-க்களான கேரளாவைச் சேர்ந்த பினாய் விஸ்வம் தமிழகத்தைச் சேர்ந்த திருப்பூர் சுப்பராயன் மற்றும் நாகப்பட்டினம் செல்வராஜ் ஆகிய மூவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை அரசின் நிவாரண நிதிக்கு கொடுப்பார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் டி ராஜா அறிவித்துள்ளார்.

Advertisment

 D. Raja

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ஏற்கனவே கம்யூனிஸ்ட் எம்பிகள் தங்களது சம்பளத்தைக் கட்சிக்குக் கொடுத்து கட்சி கொடுக்கிற ஊதியத்தை மட்டுமே பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் அவர்கள் முழு சம்பளத்தையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசின் நிவாரண நிதிக்கு கொடுத்து ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளது. பெரும்பான்மை பலம் கொண்ட பாஜக எம்பிக்கள் 300க்கும் மேல் இருக்கிறார்கள். அதேபோல் மற்ற கட்சிகளிலும் 10, 20, 30 என எம்பிக்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ள மூன்று எம்பிக்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை அரசுக்கு வழங்குவது குறிப்பிடத்தக்கது. இதைப் பின்பற்றி மற்ற கட்சிகளும் தங்களது எம்பிக்களின் சம்பளத்தை அரசுக்கு நிவாரண நிதியாக வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

corona virus cpi Financial help MPs
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe