மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் தியாகிகள் நினைவு மணிமண்டபம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டவுடன் கூடியவிரைவில மணிமண்டபம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் நடைபெறும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

  Madurai

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம் பெருங்காமநல்லூரில் தியாகிகள் நினைவு மணிமண்டபம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு, வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர் . பி . உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றப்பரம்பரைசட்டம் , கைரேகை சட்டத்தை எதிர்த்தும் 1920ஆம் ஆண்டு பெருங்காமநல்லூர் கிராமத்தில் நடந்த போராடத்தின் போது 16 சுதந்திரப் போராட்ட வீரர்களை சுட்டுக் கொல்லப்பட்டனர் . அவர்களின் வீரத்தைப்பறைசாற்றும் விதமாக அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் நினைவு மணிமண்டபம் கட்டவேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது . அதனை பரிசீலனை செய்த தமிழக முதுல்வர் 2019ல் நடந்த சட்டசபை கூட்டத்தில் 110 விதியின் கீழ் தியாகிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில் நினைவு மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார் . அதனைத் தொடர்ந்து மணிமண்டபம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Advertisment

அமைச்சர்களுடன் பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு மணி மண்டப பொதுநலசங்க நிர்வாகிகளும் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூடிய விரைவில் நினைவு மணிமண்டபம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டவுடன் மணிமண்டபம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் நடைபெறும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் , தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் , அரசு அதிகாரிகள் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.