The constituency list for the DMK alliance parties is likely to be released today

Advertisment

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்குத் தலா 6 சட்டமன்றத் தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளும்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3சட்டமன்றத் தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளுடன்கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும்ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிலையில், மற்ற கட்சிகளுடன் தி.மு.க. தலைமை தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது.அதேபோல்நாளை (10.03.2021) திமுக சார்பில் போட்டியிடும்வேட்பாளர்களின்பட்டியல் வெளியாகும் என திமுக தலைமை அறிவித்துள்ள நிலையில், இன்று திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்தபட்டியல் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.