c v shanmugam - Thamimum Ansari

Advertisment

இன்று சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின்போது நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி, நாகப்பட்டினத்தில் சட்டக்கல்லூரி துவக்க அரசு ஆவணசெய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

நாகப்பட்டினம் என்பது காவிரி டெல்டா மாவட்டங்களில் முக்கிய நகரமாகும். ஐம்பெரும் தமிழ் காப்பியங்களில் இடம்பெற்ற ஊராகும். ஆங்கிலேயர்கள் காலத்திலும் முக்கிய நகரமாக இருந்தது. சோழ மன்னர்கள் இங்கிருந்துதான் தென்கிழக்காசியாவை வெற்றிகொள்ள புறப்பட்டார்கள். எனவே , டெல்டா மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் ஒரு சட்டக்கல்லூரி அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர் சண்முகம், இதுகுறித்து அரசு பரிசீலிக்கும் என்றார். மேலும் தனியார் யாரேனும் அங்கு சட்ட கல்லூரி அமைக்க முன் வந்தால் கூறுங்கள், அதற்கு அனுமதி அளிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றார்.

Advertisment

அப்போது எழுந்த மு.தமிமுன் அன்சாரி, பரிசீலிக்கப்படும் என்றதற்கு நன்றி, தனியார் நிறுவனம் அங்கு சட்டக் கல்லூரி தொடங்க முன்வந்தாலும், அரசு சார்பில் சட்டக்கல்லூரி தொடங்கினால்தான் குறைவான கட்டணத்தில் எளியவர்களும் படிக்க முடியும் என்பதால், அதையே தருவது குறித்து பரிசீலிக்குமாறு வலியுறுத்தினார்.