Advertisment

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட காங்கிரஸார்! (படங்கள்) 

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் தெரிவித்து நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களைநடத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்று சென்னை ஆளுநர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பானது. வடசென்னை மாவட்ட தலைவர் திரவியம் மற்றும் மகளிரணி தலைவர் சுதா, இளைஞரணி தொண்டர்கள் என சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe