கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 10, 2023 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ள நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
மாலை 5 மணி நிலவரப்படி காங்கிரஸ் 136 இடங்களிலும், பாஜக 64 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. இதில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக 114 இடங்களிலும், பாஜக 51 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 17 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.