/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2491.jpg)
மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 34வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டவர் காங்கிரஸ் எம்.பி.யாக தற்போது இருக்கும் திருநாவுக்கரசர். காங்கிரசில் நீண்ட வருடங்களாக இருந்தாலும், எம்.ஜி.ஆரின் புகழைப் பரப்புவதில் திருநாவுக்கரசர் சளைத்ததில்லை. எம்.ஜி.ஆரின் நினைவு நாளிலும், பிறந்தநாளிலும் சென்னையிலுள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வணங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார் திருநாவுக்கரசர்.
இன்று எம்.ஜி.ஆரின் 34வது நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு தனது மகனும், எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் சொர்ணா சேதுராமனுடன் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தி வணங்கினார் திருநாவுக்கரசர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)