ADVERTISEMENT

பிரியங்கா காந்தி கைதை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

03:15 PM Oct 04, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்திரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் என்பது நீண்ட நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் இந்தப் போராட்டத்தில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் லக்கிம்பூர் பகுதியில், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் சென்ற கார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் மீது மோதியது. இதில் விவசாயிகள் நான்கு பேர் மரணமடைந்தனர். மேலும் இப்பிரச்சனையை அடுத்து நடைபெற்ற கலவரத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று (04/10/2021) அதிகாலை லக்னோவில் இருந்து சாலை மார்க்கமாக பன்வீர்பூர் கிராமத்திற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கிராம எல்லையிலேயே அவரை காவல்துறையினர் தடுத்து, கைது செய்தனர்.

இந்நிலையில், பிரியங்கா காந்தியின் கைதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அக்கட்சியின் சட்டமன்றத் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் காலை 11.30 மணி அளவில் சத்தியமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT