Congress protest in Karnataka; There is excitement as the cabinet takes charge

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தின் முன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரானருத்ரப்பா லமானியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. கடந்த 20 ஆம் தேதி முதலமைச்சராக சித்தராமையாவும் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் இவர்களுடன் 8 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதுவரை அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கப்படவில்லை. மொத்தமுள்ள 34 அமைச்சர்களில் 10 பேர் அமைச்சரானதால் மீதமுள்ள 24 இடங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பின் அமைச்சர்களாக பொறுப்பேற்க இருப்பவர்களின் இறுதிப்பட்டியல் தயாரானது. அவர்கள் இன்று காலை 11:45 மணியளவில் ராஜ்பவனில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர்.

Advertisment

இந்நிலையில் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தின் முன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரானருத்ரப்பா லமானியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சரவையில் ருத்ரப்பா லமானிக்கும் இடம் தரும்படி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றிரவு வரை எங்கள் பஞ்சார சமூகத் தலைவர் ருத்ரப்பா லமானியின் பெயர் அமைச்சரவை பட்டியலில் இருந்தது, ஆனால் இன்று அவரது பெயர் அமைச்சரவை பட்டியலில் இல்லை. அவருக்கு அமைச்சர் பதவியை கொடுக்கவில்லை என்றால் அதை எதிர்த்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம். ஏனென்றால் தேர்தலில் நாங்கள் எங்கள் சமூகத்தின் 75% வாக்குகளை காங்கிரஸ் கட்சிக்கு அளித்துள்ளோம். எங்கள் சமூகத்தில் இருந்து ஒருவராவது அமைச்சரவையில் இடம்பெற வேண்டும்” என்று ருத்ரப்பாவின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.