Skip to main content

மத்திய அரசை கண்டித்து திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

Published on 09/11/2018 | Edited on 09/11/2018
congress protest




சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. 
 

அப்போது பேசிய திருநாவுக்கரசர், பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவையும், மக்கள் பாதிப்பையும் கருத்தில் கொண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி அறிவுறுத்தலின்பேரில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை எடுத்த 3ஆம் ஆண்டின் துவக்க நாளை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்ததாக கூறினார்.
 

இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவல்ல பிரசாத் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சட்டத்திற்கு பிரதமர் மோடி பதில் சொல்லியாக வேண்டும்- காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேச்சு!

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தை, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பெயரளவில் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதிலும் சென்னையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மூத்த தலைவர்கள் பங்கேற்கவில்லை என ஆக.24-ந்தேதி வெளியான நக்கீரன் இதழில் குறிப்பிட்டிருந்தோம்.
 

இதையடுத்து, இன்று (26-09-2019) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் காங்.கமிட்டி தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். (இன்றைய தினமும் பெரும்பாலான மூத்த தலைவர்கள் கலந்துக்கொள்ளவில்லை) ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

P CHIDAMBARAM

 

மேடையில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், "நாட்டின் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு வருகிறது. வேலை இல்லாமல் இளைஞர்கள் தவித்து வருகின்றனர். பெரிய பெரிய நிறுவனங்கள் தற்போது மூடும் நிலைக்கு தள்ளபட்டுள்ளது. பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அதை சரிசெய்ய வேண்டிய மோடி அரசாங்கம், காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்தும் வகையில் தான், சிதம்பரத்தை கைது செய்துள்ளது. பிரதமர் மோடி நீதித்துறை, ராணுவம், காவல்துறை போன்றவற்றை கையில் வைத்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சட்டத்திற்கு  மோடி பதில் சொல்லியாக வேண்டும்" என்றார்.

 
கடந்த வாரம் கராத்தே தியாகராஜன் தனியாக ப.சிதம்பரத்திற்காக போராட்டம் நடத்தினார். இப்போது, காங். தரப்பில் மற்றொரு போராட்டம் நடைபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



 

Next Story

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் கண்டன ஆர்ப்பாட்டம். (படங்கள்)

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி  அமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 20- ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ஆம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர். 
 

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை தொடந்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துவருகிறது. இன்று (26.08.2019) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கே.ஜெயக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்துகொண்டு கண்டன் உரையாற்றினர்.