சி.பி.ஐ. உயர் அதிகாரிகளை மாற்றியது தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து இன்று நாடு முழுவதும் சி.பி.ஐ. அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ராகுல்காந்தி அறிவித்தார்.

Advertisment

அதன்படி சென்னை சாஸ்திரிபவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு எதிரே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

Advertisment

ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக சாஸ்திரி பவன் எதிரே உள்ள ஆண்டர்சன் சாலை முகப்பில் தொண்டர்கள் திரள தொடங்கினார்கள்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களான குமரிஅனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, செல்லகுமார், எம்.எல். ஏ.க்கள் கே.ஆர்.ராமசாமி, விஜயதரணி, ராஜேஷ்குமார், பிரின்ஸ், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு தலைவர் செல்வபெருந்தகை உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள், திருநாவுக்கரசர் வருகைக்காக காத்திருந்தனர். அவரை தொண்டர்கள் திரண்டு நின்று பகுதிக்கு மெயின் ரோடு வழியாக வரும்படி தகவலும் தெரிவித்து இருந்தனர்.

Advertisment

ஆனால் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் அவரை பின்புறமாக அழைத்து வந்தனர். இதனால் ஆர்ப்பாட்டம் தொடங்கியபோது முன் பகுதியில் திரண்டு நின்ற மூத்த நிர்வாகிகள் அந்த பகுதிக்கு வரவில்லை. திருநாவுக்கரசர் நேரடியாக ஒலிபெருக்கியில் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ.வை அழைத்தார். ஆனால் யாரும் அங்கு செல்லவில்லை. இங்கு போராட்டம் நடத்தினால்தான் பொதுமக்களுக்கு எதற்காக போராட்டம் நடத்துகிறோம் என்று தெரியும் என்று இங்கேயே நின்றனர்.

தொடர்ந்து திருநாவுக்கரசர், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோர் சிறப்புரை ஆற்றி விட்டு போராட்டத்தை முடித்தனர். மற்றொரு இடத்தில் கே.ஆர்.ராமசாமி உள்பட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அலுவலகத்தை முற்றுகையிட திருநாவுக்கரசர் மெயின் ரோடு பகுதிக்கு வந்தார். அங்கு கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ.வை திருநாவுக்கரசர் அழைத்து, “ஏன் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு வரவில்லை. நீங்கள் தனி அரசியல் நடத்துகிறீர்களா? என்று ஆவேசமாக கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே சிலர் நடுரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். பின்னர் கலைந்து செல்லலாம் என கட்சி நிர்வாகிகள் சொன்ன பிறகு தொண்டர்கள் கலைந்து சென்றனர்.