Congress people made special pooja to MKStalin to be chief Minister

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்று இரவு 7 மணியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன அரசியல் கட்சிகள்.திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, திமுகவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்துள்ளது. இந்த நிலையில்,தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக பதவியேற்க வேண்டி வட சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்டத் துணைத் தலைவர் கே.சண்முகம் தலைமையில் கொளத்தூர் தொகுதியில் 108 பெண்கள் பால் குடம் ஏந்தி வழிபாடு நடத்தியுள்ளனர்.

Advertisment

Congress people made special pooja to MKStalin to be chief Minister

Advertisment

பரபரப்பாக கவனிக்கப்பட்ட அந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் டில்லிபாபு, மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க தலைவர் சேம. நாராயணன், லலிதா சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர். கொளத்தூர் தொகுதியில் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோட்டில் இருந்து 108 பெண்கள் பால்குடம் சுமந்து தீட்டித் தோட்டம் 4வது தெருவில் உள்ள ஸ்ரீ ஜெயசித்தி விநாயகருக்கும், ஸ்ரீ நாகாத்தமனுக்கும் சிறப்பு பூஜை மூலம் வழிபாடு நடத்தியுள்ளனர். மு.க.ஸ்டாலினின் நட்சத்திரமான மகம், மற்றும் சிம்ம ராசி ஆகியவைகளை உச்சரித்து, முதலமைச்சராக பொறுப்பேற்று தமிழகத்திற்கு நன்மைகள் செய்ய வேண்டும் என பால அபிஷேகம் செய்து தொகுதி மக்கள் வேண்டிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சி தொகுதியில் உள்ள திமுகவினரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.