விடுதலை போராட்ட வீரர் எஸ்.சத்தியமூர்த்தியின் 89வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை, சத்தியமூர்த்தி பவனில் இன்று (28.3.2022) திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் அவரது உருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தமிழக காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், முன்னணி அமைப்புகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.