Advertisment

மோடி அரசு பழிவாங்கும் நோக்கத்தில் சூரத் நீதிமன்றத்தில் 2019-ல் போடப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் நாடாளுமன்ற பதவியில் இருந்து நீக்கியதை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் வட சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் சார்பில் திருவொற்றியூர், காலடிப்பேட்டை, காந்தி சிலை முன்பு சத்தியாகிரக அறவழிப் போராட்டம் நேற்று (26.03.2023) நடைபெற்றது.