Advertisment

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த 14 -ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு முறிந்த நிலையில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்த அந்த பெண், சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.

பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று (03.10.2020) உத்தரபிரதேச அரசைகண்டித்து வடசென்னை காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாரிமுனையில் போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.