Advertisment

கே.டி.ராகவன் மீது காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பரபரப்பு புகார்!

KT

தமிழ்நாடுபாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன். இவர் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவிவருவது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாஜகவில் இணைந்தார் ஊடகவியலாளர் மதன். இவர்மதன் டைரிஎன்ற பெயரில் யூ-ட்யூப் சேனல் நடத்திவருகிறார். இந்தச் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மதன், "பாஜகவில் உள்ள சில தலைவர்கள் பெண்களிடம் அத்து மீறி நடக்கின்றனர். பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கின்றனர். அதற்காக சில இடங்களையும் சென்னையில் வைத்துள்ளனர். 15 தலைவர்கள் இதுபோன்று செயலில் ஈடுபடும் வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் உள்ளன. பாஜக மாநில பொறுப்பில் உள்ள கே.டி. ராகவன், ஒரு பெண் நிர்வாகியிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்று பாருங்கள்" எனக் கூறி ஒரு காட்சியை வெளியிட்டார்.

Advertisment

இதனையடுத்துகே.டி. ராகவன் அவரது மாநில பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,"இந்த விவகாரம் உயர் தொழில்நுட்பத்தில் தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் சதி, இதைத் தான் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளத்தயாராக இருப்பதாக கே.டி. ராகவன் என்னிடம் தெரிவித்துள்ளார். இதிலிருந்து அவர் சட்டப்பூர்வமாக வெளிவருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

JOTHIMANI

இந்நிலையில் கே.டி. ராகவன் மீது கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொண்டதாகவும், இதுகுறித்து விசாரித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்எனவும்அந்த புகாரில் ஜோதிமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் முக்கிய பிரமுகரான கே.டி.ராகவன் மீது குற்றச்சாட்டு வைக்கும்படியான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவர் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

congress jothimani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe