காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Advertisment