Advertisment

"19 இலட்சம் மக்களை பரிதவிக்க விட்ட பாஜக"... பாஜகவை கடுமையாக விமர்சித்த ப.சிதம்பரம்!

குடியுரிமைக்கு எதிராக நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அவதூறாக விமர்சித்ததாக பாஜகவினர் புகார் தெரிவித்ததை அடுத்து நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து பதிவு செய்து இருந்தார். அதில், '’பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன. பேசுவதே குற்றம் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு ஏன் 14 நாள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்? இப்படி நினைப்பவர்களை லண்டன் மாநகர் ஹைட் பார்க் (Hyde Park) என்ற பூங்காவிற்கு அனுப்ப வேண்டும். அங்கே பேசப்படுவதை அவர்கள் கேட்க வேண்டும். பேச்சும் செயலும் இணைந்தால் தான் குற்றம். நெல்லை கண்ணன் பேசினார் என்று வைத்துக்கொள்வோம், என்ன தீய செயலை அவர் செய்தார்?’’கேள்வி எழுப்பி இருந்தார்.

Advertisment

congress

இந்த நிலையில் தற்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து பேசியுள்ளார். அதில், தற்போது 19 லட்சம் மக்கள் பரிதவிப்பது போன்ற கசப்பான அனுபவம் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்படவில்லை. தேசிய மக்கள்தொகை பதிவேடுடன் நேரடி தொடர்புடையதே தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி). காங்கிரஸ் ஆட்சியில் தேசிய மக்கள் தொகை பதிவேடு மட்டும்தான் தயாரிக்கப்பட்டது . 2010இல் மக்கள் தொகை பதிவேட்டை தயாரித்தபோது அசாமில் குடிமக்கள் பதிவேடு இல்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும் கூறியுள்ளார்.

Advertisment
amithsha congress modi p.chidambaram politics
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe