Advertisment

ஸ்டாலின் 10 மேடைகளில் பேசணும்... ரஜினிக்கு 10 நிமிடம் போதும்... சர்ச்சை கருத்து தெரிவித்த கராத்தே.தியாகராஜன்!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 37 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றிருந்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த ஆலோசனையில் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், கட்சி தொடங்குவது தொடர்பாகவும், கட்சியின் கொடி, பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை விரைவுப்படுத்துவது குறித்தும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

dmk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் கராத்தே தியாகராஜன் இது குறித்து பேசும் போது, நடிகர் ரஜினிகாந்த் அடுத்த சில மாதங்களில் கட்சி துவங்கிவிடுவார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 மேடைகளில் பேசுவதை விட 10 நிமிட ரஜினியின் கருத்து மக்களிடையே பிரபலமாகிறது. ரஜினியின் ஒவ்வொரு கருத்தும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. தமிழகத்தில் இருக்கும் வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார். ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகு தான் கூட்டணி குறித்து முடிவு செய்வார். 2021ல் தமிழகத்தில் ரஜினி ஆட்சியை பிடிக்கப் போவது நிச்சயம் என்று கூறினார். திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து கராத்தே.தியாகராஜன் பேசியதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

politics karate thiagarajan Speech rajinikanth stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe