எஸ்.காண்டீபன் தலைமையில் கொண்டாடப்பட்ட கே.எஸ். அழகிரியின் பிறந்தநாள்  

நேற்று (22ஆம் தேதி) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியின் 70வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்தவகையில் சென்னை, வடபழனி சன்னதி தெருவில் உள்ள சிவன் கோயில் அருகில் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் எஸ்.காண்டீபன் தலைமையில் கொண்டாடப்பட்ட இவ்விழாவில், காங்கிரஸ் கட்சி சட்டமன்றத் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கலந்துகொண்டார். இவ்விழாவில், 700 பேருக்கு அன்னதானம் மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

congress
இதையும் படியுங்கள்
Subscribe