Congress executives consult tomorrow

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமானபேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக 15 இடங்கள் கேட்டு விருப்ப பட்டியலைக் கொடுத்துள்ளதாகவும்,அதில்9தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனவிசிக கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் காங்கிரஸ் 30 தொகுதிகளைக் கேட்டுள்ளதாகவும், அதில் 24தொகுதிகளைஒதுக்கதிமுக முன்வந்துள்ளாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.திமுகவைப் பொறுத்தவரை, கூட்டணிக் கட்சிகளுக்கு 54 தொகுதிகளும், மீதமுள்ள 180 தொகுதிகளில் தாங்களேபோட்டியிடஉள்ளதாகவும் தகவல்கள்வெளியாகியுள்ளன.

Advertisment

இந்நிலையில், திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், நாளை (04.03.2021) சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். தினேஷ்குண்டுராவ், வீரப்பமொய்லி,கே.எஸ்.அழகிரிஆகியோர் இந்த அவசரசெயற்குழுகூட்டத்தில் பங்குபெற இருக்கிறார்கள்.

Advertisment