காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி, மீண்டும் மூன்று நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.
ஏற்கனவே தமிழகம் வந்த ராகுல் காந்தி, கடந்த ஜனவரி 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் பி.14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழக வருகிறார்.
ராகுல் காந்தி, மீண்டும் தமிழகம் வருவதையொட்டி, தமிழக காங்கிரஸ் பொருப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தலைமையில் நிர்வாகிகளுடன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.