மோடி சமூகம் குறித்து அவதூறு பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையை குஜராத்தின்சூரத் நீதிமன்றம் விதித்தது. அதனைத் தொடர்ந்து அவரை மத்திய அரசு எம்.பி. பதவியிலிருந்து நீக்கியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை அறவழி மௌனப் போராட்டம் நடைபெற்றது. இதில்காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் மௌனப் போராட்டம் (படங்கள்)
Advertisment