70 ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது.. பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே பதிலடி

congress chief mallikarjuna kharge questioning against for pm modi  

கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.நாளை மறுநாள் தேர்தல் எனும்நிலையில், இன்று மாலையுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதனால், அரசியல் கட்சியினர் தீவிரமாக தங்கள் இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று கர்நாடகா மாநிலம், கல்புர்கியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், "காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்காக தங்களது உயிரைத் தியாகம் செய்த போது அரசின் முக்கியப் பதவிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் வசதியாக அமர்ந்திருந்தனர். மகாத்மா காந்திதனது வாழ்க்கையை அர்ப்பணித்து நாட்டுக்குசுதந்திரம் வாங்கி கொடுத்தார். கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி என்ன செய்துவிட்டது என்று பிரதமர் மோடி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்.

70 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி எதுவும் செய்திருக்காவிட்டால், இப்போது நீங்கள் நாட்டின் பிரதமராக இருந்திருக்க மாட்டீர்கள். மகாத்மா காந்தியால் அவர் அணிந்திருந்த தொப்பி பிரபலமானது. நேருவால் அவர் அணிந்திருந்த சட்டை பிரபலமானது. ஆனால், தினமும் நான்கு முறை மாற்றும் கோட் தான் பிரதமர் மோடியால் பிரபலமடைந்துள்ளது. சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் காவி நிற கோட்டை அவர் தினமும் மாற்றுகிறார். அந்த கோட்டை தற்போது ‘மோடி ஜாக்கெட்’ என்று மக்கள் அழைக்கின்றனர். நாட்டுக்கும்கர்நாடகாவுக்கும் நல்லது செய்யுங்கள். ஆனால், காங்கிரசை அவதூறு செய்வதால் நாடு முன்னேற்றமடையாது.

இந்திய அரசியலமைப்புசட்டத்தை எழுதுமாறு காங்கிரஸ் கட்சி தான் அண்ணல் அம்பேத்கரைக் கேட்டுக்கொண்டது. அதில் வாக்குரிமை உள்பட மக்களுக்குச் சம உரிமை அளிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஊராட்சி தலைவராகசட்டமன்ற உறுப்பினராகநாடாளுமன்ற உறுப்பினராக மற்றும் அமைச்சர்களாக உருவாகக் காரணம் காங்கிரஸ் கட்சி அளித்த அரசியல் அமைப்பு சட்டம் தான்.

ஆர்எஸ்எஸ் அல்லது பாஜகவினர் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப்பாடுபடவில்லை. இவர்களில் யாராவது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றதுண்டா. அப்போது ஆர்எஸ்எஸ் தங்கள் செயல்வீரர்களுக்கு என்ன தகவல் கொடுத்தது தெரியுமா. மற்றவர்கள் சுதந்திரத்துக்காகப் போராடட்டும். நமது செயல்வீரர்கள் அரசு வேலை பெறுவதில் கவனம் செலுத்துங்கள். இதனால் ஆர்எஸ்எஸ் விசுவாசிகள் ராணுவம் உள்ளிட்ட அரசு வேலைகளில் நாடு முழுவதும் அமர்ந்தனர்" என்று பேசினார்.

karnataka
இதையும் படியுங்கள்
Subscribe