Advertisment

திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி ஒரு இடத்திலும், திமுக, காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களிலும் வெற்றி பெற்றது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜூன் 18ஆம் தேதி பதவி ஏற்று கொண்டனர். அனைவரும் தமிழில் பதவி ஏற்று கொண்டது தமிழக மக்களால் வரவேற்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவி காலம் முடிய போகும் நிலையில், மீண்டும் ராஜ்ய சபா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க திமுக, அதிமுக கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக சார்பாக 3 ராஜ்யசபா எம்.பி.களையும், அதிமுக சார்பாக 3 ராஜ்யசபா எம்.பி.களையும் தேர்ந்தெடுக்க முடியும்.

Advertisment

dmk

இதில் திமுக,அதிமுக இரண்டு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என்று நாடாளுமன்ற தேர்தலின் போது கூறினார்கள்.ஆகையால் திமுக சார்பாக வைகோவிற்கும், அதிமுக சார்பாக அன்புமணிக்கும் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நடைபெற இருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என்று கூறுகின்றனர். இதில் நாங்குநேரி ஏற்கனவே காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அந்த தொகுதியை திமுகவிற்கு விட்டு கொடுக்க வேண்டும் என்று திமுக சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த தொகுதியை திமுகவிற்கு விட்டு கொடுக்கும் நிலையில் காங்கிரஸ் மேலிடம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதோடு காங்கிரஸ் சார்பாகவும் திமுகவிற்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. அந்த செய்தி பற்றி விசாரித்த போது காங்கிரஸ் கட்சி திமுகவிற்காக நாங்குநேரி சட்டமன்ற தொகுதியை விட்டுக்கொடுப்பதாகவும், அதற்கு பதிலாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ராஜ்யசபா சீட் கொடுக்கும் படி கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்த்தெடுக்கப்படுவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

congress loksabha election2019 RajyaSabha vaiko
இதையும் படியுங்கள்
Subscribe