திருச்சி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சு.திருநாவுக்கரசர் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் தீயத்தூர் கிராமத்தில் (ராமநாதபுரம் தொகுதி) வாக்கு பதிவு செய்ய வந்தார்.

congress candidate thirunavukkarasar interview

Advertisment

வாக்கு பதிவு இயந்திரம் பழுதானதால் ஒரு மணி நேரம் காத்திருந்து வாக்கு பதிவு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். காலை வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் இயந்திர கோளாறுகள் பல இடங்களில் ஏற்பட்டு வாக்குப்பதிவு தாமதம் அடைந்துள்ளது. அதனால் என் வாக்குச் சாவடியில் ஒரு மணி நேரம் காத்திருந்து வாக்கு பதிவு செய்தேன். இயந்திரங்களை உடனுக்குடன் சீரமைக்க வேண்டும் என தேர்தல் பார்வையாளரிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். இந்த நிலையில் நான் இன்று வாக்குப்பதிவு நடக்கும் இடங்களுக்குச் சென்ற போது வாக்காளர்கள் மகிழ்ச்சியாக சைகை மூலம் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்திருப்பதாக சொல்கிறார்கள். அதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.