style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கர்நாடகாவில் நாளை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசாமி முதல் அமைச்சராக பதவியேற்கிறார். கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைவர்களை நேற்று டெல்லி சென்று நேரில் சந்தித்து வந்தார் குமாரசாமி. இந்த நிலையில் அமைச்சரவையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் பங்கு குறித்து இருதரப்பும் பேசி முடிவு செய்துள்ளனர்.
இதில் முதல் அமைச்சர் குமாரசாமி உள்பட மஜத எம்எல்ஏக்கள் 15 பேருக்கு அமைச்சர்கள் பதவி என்றும், காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு துணை முதல் அமைச்சர்கள் பதவி உள்பட 19 பேருக்கு அமைச்சர்கள் பதவி என்றும் முடிவு செய்துள்ளனர். முதல் அமைச்சர், இரண்டு துணை முதல் அமைச்சர்கள் உள்பட மொத்தம் 34 பேர் கர்நாடக அமைச்சரவையில் இடம்பெறுகிறார்கள்.
இதில் துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் கர்நாடக தலைவர் பரமேஸ்வர், மற்றொருவரும் செயல் தலைவராக உள்ள ஆர்.எஸ்.பாட்டீல் அல்லது சிவசங்கரப்பாவா என்பது இன்று இரவு முடிவாகும் என்கிறார்கள். பதவியேற்பு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மயாவதி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ட பலர் கலந்து கொள்கின்றனர். பதவியேற்பு விழாவிற்காக விதான் சவுதாவில் அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.