Rajinikanth 00

Advertisment

சென்னை போயஸ் கார்டனில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது அவரிடம், பாஜகவுக்கு எதிராக பலமான ஒரு கூட்டணி உருவாகிறதே என்ற கேள்விக்கு, ஒருவரை 10 பேர் எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி என பதில் கேள்வி எழுப்பினார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன்,

Advertisment

ரஜினிகாந்த் அவர்களின் நேர்காணலை நான் பார்த்தேன். இதுவரையில் பூசி மெழுகி விடைகள் சொன்ன ரஜினிகாந்த், முதல் முதலாக வெளிப்படையாக பாஜகவுக்கு ஆதரவாக தன் கருத்தை சொல்லியிருக்கிறார். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்று பெரியார் அடிக்கடி சொல்லுவார். அப்படி இப்போது இந்த பூனைக்குட்டியும் வெளியே வந்திருக்கிறது.

Suba Veerapandian

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

என்னைப் பொறுத்தவரையில் இது நல்லது என்றே கருதுகிறேன். தான் எங்கே இருக்கிறேன் என்பதை ஒவ்வொருவரும் வெளிப்படையாக சொல்லுவதுதான் நல்லது. இன்றைக்கு நாட்டை இத்தனை அலங்கோலங்களுக்கு ஆளாக்கியிருக்கின்ற பாஜகவை ஆதரிப்பதன் மூலம் திரைப்படத்துறையில் தான் பெற்ற புகழ், செல்வாக்கு என அனைத்தையும் இழப்பதற்கு ரஜினிகாந்த் தயாராகிவிட்டார் என்று புரிகிறது. அவருக்கு நம் வாழ்த்துக்கள். இவ்வாறு கூறினார்.