Advertisment

எய்ம்ஸ் செங்கல்லை ஸ்டாலினிடம் கொடுத்து வாழ்த்து பெற்ற உதயநிதி!

Advertisment

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலில்சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் எதிர்த்துபோட்டியிட்ட பாமகவேட்பாளர் கசாலியை விட68,133 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் திமுக தலைவர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின், பிரச்சாரத்தின் போது பயன்படுத்திய எய்ம்ஸ் செங்கல்லையும் கொடுத்து வாழ்த்து பெற்றார்.

aiims tn assembly election 2021 udhayanithi stalin
இதையும் படியுங்கள்
Subscribe