Advertisment

பள்ளி மாணவி உள்ளிட்ட சாதனையாளர்களை வாழ்த்திய ஸ்டாலின்! (படங்கள்)

Advertisment

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்கிற நிகழ்ச்சிக்காக திருவண்ணாமலை வந்த திமுக தலைவர் ஸ்டாலின், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மனுக்கள் வழங்கிய சில பொதுமக்களிடம் அவர்களின் கோரிக்கைகளைப் பற்றி பேசவைத்து அதற்கான பதில்களைத் தந்தார்.

நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு, திருவண்ணாமலையைச் சேர்ந்த,மொழிபெயர்ப்புக்காக சாகித்யா அகதாமி விருது பெற்ற எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ, இடுகாட்டில் பிணம் எரிக்கும் பணியில் உள்ள மாநில அரசின் விருதுபெற்ற கண்ணகி, சர்வதேச சுற்றுச்சூழல் விருதுபெற்ற பள்ளி மாணவி வினிஷா ஆகியோர் சர்வதேசம், தேசிய, மாநில அளவில் முக்கியத்துவம் பெற்றவர்களாக விளங்கி வருகின்றனர். அரசின் சார்பில் சில விருது பெற்றுள்ளனர். அவர்களை வாழ்த்தி மேடையில் சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்

thiruvannamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe