Advertisment

ஆட்சி அமைக்க தேவையான இடங்களை கைப்பற்றியது காங்., - மஜத! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

sith

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களை காங்கிரஸ் கட்சியும் மஜத கட்சியும் கைப்பற்றியது என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Advertisment

கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 2 இடங்களில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 214 தொகுதிகளில் 99 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 76 தொகுதியிலும் , மஜத 38 தொகுதியிலும், சுயேட்சை 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

Advertisment

ஒரு தொகுதியில் மட்டும் சுயேட்சை முன்னணியில் உள்ளது என்றும், இன்னும் 8 தொகுதிகளில் மட்டும் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவு அறிவிப்பு வெளியாகவில்லை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Commission Election karnaraka
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe