“Cong Administrators seeks constituency in Chennai. ..” - K.S. Alagiri

Advertisment

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், அமைச்சர் ராஜகண்ணப்பன் காங்கிரஸ் குறித்து பேசியதற்கு திமுக தான் அவரை கண்டிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அழகிரி, “சென்னையில் திமுக மட்டும் தான் போட்டியிட வேண்டுமா, காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுத்தாருங்கள் என்று என்னிடம் நிர்வாகிகள் கேட்கிறார்கள். கூட்டணியில் இது வழக்கமாக பேசப்பட்டுவது தான். ஒரு தொகுதியில் ஒரே கட்சி தொடர்ந்து நின்றால் இன்னொரு கட்சிக்கு வாய்ப்பு இருக்காது. இது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். ஆட்சி அதிகாரம் மாறி மாறி வருவதில் தவறில்லை என்று நமது அரசியலமைப்பு சொல்கிறது. அதிகாரம் என்பது தொடர்ந்து இருக்கவும் கூடாது. ஒருவரே ஆட்சி செய்வது சர்வாதிகார ஆட்சியாக மாறிவிடும். எனவே ஆட்சி மாற்றங்கள் தேவை. அதிகாரத்தில் இல்லை என்று ஒருபோதும் காங்கிரஸ் கவலைப்பட்டது கிடையாது. பா.ஜ.க. ஒரு மதவாத கட்சி. காங்கிரஸ் ஒரு மதச்சார்பற்ற கட்சி. இந்திய எல்லைக்குள் வாழ்கிறவர்கள் அனைவருமே இந்தியர்கள் என மகாத்மா காந்தி கூறியதுதான் காங்கிரஸ் கட்சியின் லட்சியம்.

பிரதமர் மோடியின் ஆட்சி வீழ்ச்சிகரமான ஆட்சியாகும். கோயில் கட்டுவதால் மட்டுமே பா.ஜ.க. வெற்றிபெறாது. கோயில் கட்டியவர்கள் எவரும் நல்லா இருந்ததாக வரலாறே கிடையாது. தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றால் பதவி போகும் என்கின்றனர். ராஜராஜனுக்கு அப்படித்தான் பதவி போனதாக கூறப்படுகிறது. அயோத்தி கோயிலை முழுமையாக கட்டாமல் கும்பாபிஷேகம் செய்தது மிகப்பெரிய சாமி குற்றம்.

Advertisment

அதிமுக, பா.ஜ.க.வை துறந்தது வரவேற்கத்தக்கது. ஆனால், காங்கிரஸ் ஏன் வரவேற்கவில்லை என்றால், அதிமுக - பாஜக இடையே ஓர் கள்ள உறவு இருப்பதாக சந்தேகிக்கிறோம். ஒரு பெரிய முடிவை எடுக்கும்போது அதற்கான காரணத்தை மக்களிடம் சொல்ல வேண்டும். அதிமுக இதுவரை சொல்லவில்லை. எனவே அதிமுகவினர் நம்பத் தகுந்தவர்களாக இல்லை” என்று தெரிவித்தார்.