Advertisment

இரு தரப்புக்கும் இடையே மோதல்; பாஜக கூட்டத்தில்  சலசலப்பு..!

Conflict between the two sides; BJP meeting buzz

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இன்று (02.04.2021) மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே நடைபெறவுள்ள பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றுதனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார் மோடி.

Advertisment

தமிழகத்தில் அதிமுக, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் மோடி, பின்னர் கேரளா, கன்னியாகுமரியிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார். முன்னதாக நேற்று இரவு மதுரை வந்தடைந்த மோடி, மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனத்தை முடித்துக்கொண்டு, அங்குள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தங்கினார்.

Advertisment

இந்நிலையில், இன்று பிரதமர் மோடி பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில்பா.ஜனதா நிர்வாகி ஒருவர், செய்தியாளர்களை அவமரியாதையாக பேசியதாக தெரிகிறது.இதற்கு செய்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே திடீர் மோதலும் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போலீசார் இரு தரப்பையும் தடுத்து சமாதானப்படுத்திவிட்டனர்.

madurai admk pm modi tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe