Completed nomination papers; Only 3 people are contesting for the post of President

Advertisment

காங்கிரஸ் கட்சியில் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு பிற்பகல் மூன்று மணியுடன் நிறைவு பெற்றுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 24- ஆம் தேதி முதல் செப்டம்பர் 30- ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் அக்டோபர் 8- ஆம் தேதி கடைசி நாள்என்றும் அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. மொத்தம் மூன்று பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், கே.என்.திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Advertisment

வரும் அக்டோபர் 17- ஆம் தேதி அன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் 19- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.