கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் கூட்டுறவு சங்க தேர்தலில் ஆளும் கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் அமைச்சரும், தி.மு.க கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புகார் கொடுத்துள்ளார்.
ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிகள் செயல்படுவதால் எதிர்கட்சியினரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதாகவும், அதனால் குறிஞ்சிப்பாடி தொகுதியில் பல இடங்களில் கூட்டுறவு சங்க தேர்தல் அலுவலகத்தை பூட்டி எதிர்கட்சியினர் போராட்டம் நடத்துவதாகவும் குறிப்பிட்டுள்ள பன்னீர்செல்வம், நியாயமான தேர்தல் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள புகாரில் வலியுறுத்தியுள்ளார்.