kp anbalagan

Advertisment

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் விவசாயத்துறை கே.பி.அன்பழகனிடம் கூடுதல் துறையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

துரைக்கண்ணு வன்னியர் பிரிவைச் சேர்ந்தவர். அவரது துறைக்கு தஞ்சாவூரில் இருந்து யாரையாவது புதிய அமைச்சராக நியமிக்கலாம் எனஎடப்பாடி நினைத்தார். ஆனால் அப்படி ஒரு புதிய அமைச்சரை நியமனம் செய்தால் சிக்கல் வரும் என எடப்பாடிக்கு நெருக்கமான தஞ்சை மாவட்ட அமைச்சர் காமராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். அதன் பிறகே அமைச்சரவையில் முக்கியமான சி.வி.சண்முகத்திற்கு வேளாண் துறையைக் கொடுக்கலாமா என்கிற ஆலோசனை நடந்தது. சி.வி.சண்முகத்திற்கும் எடப்பாடிக்கும் இடையே மணல் விவகாரத்தில் மோதல் இருக்கிறது என்பதால் சி.வி.சண்முகத்திற்கு வேளாண் துறையைக் கொடுக்க எடப்பாடி விரும்பவில்லை. அதனால் கே.பி. அன்பழகனுக்குக் கூடுதல் துறையாக வேளாண்துறை ஒதுக்கப்பட்டது என்கிறது கோட்டை வட்டாரங்கள்.