Advertisment

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும், அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தில் துணை வேந்தர் சூரப்பா தனிச்சையாகச் செயல்பட்டதனால், அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று (20.10.2020) காலை ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.