Advertisment

"அது குழப்பம் ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டது" - முத்தரசன்!

communist party of india state secretary mutharasan

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில்,தி.மு.க.கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தி.மு.க.வுக்கும் இடையே பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது. இந்த நிலையில், நாளை (04/03/2021) காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம்நடைபெறவுள்ளது.

Advertisment

இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், தொகுதிப் பகிர்வு பேச்சுவார்த்தையில் கம்யூனிஸ்ட்- தி.மு.க.விற்கிடையில் சிக்கல் நிலவுவது போலும் பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்படுவது போலும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்படுகின்றன. அத்தகைய செய்திகளில் உண்மையில்லை என்பதுடன் அது குழப்பம் ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டது என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பொது மக்களுக்கு தெளிவுபடுத்திக் கொள்கிறது. தொகுதிப் பகிர்வு பேச்சுவார்த்தைச் சுமுகமாகத் தொடர்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

CPI State Secretary tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe