தமிழகத்தில் பாஜகவினருக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜகவினருக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை அமைத்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். அதன்படி இந்த குழுவில் சதானந்த கவுடா, சத்யபால் சிங், புரந்தேஸ்வரி, பி.சி. மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழு பாஜக தொண்டர்கள் தமிழகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கள ஆய்வு செய்யும். 4 பேர் கொண்ட குழு தமிழகத்தைப் பார்வையிட்டு, விரைவில் இது குறித்து அறிக்கையை தேசிய தலைமைக்கு சமர்ப்பிக்கும். மேலும் தமிழகத்தில் பாஜக தொண்டர்களிடம் மாநில அரசு பாகுபாட்டுடன் நடந்துகொள்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.