/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_109.jpg)
தமிழக தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், அதிமுக ஆட்சியின்போது நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகள் தண்டணை அனுபவித்தார். பின்னர் அங்கு கரோனா தொற்று ஏற்பட்டு விக்டோரியா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு வெளியே வந்த சசிகலா, சென்னைக்கு வருவதற்கு முன் பெங்களூரு தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் தங்கியுள்ளார்.
சசிகலா, மருத்துவமனையில் இருந்து அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் ரிசார்ட்டுக்குச் சென்றார். அப்போது அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சசிகலா அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் சென்றதற்கு அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி சண்முகம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிமுக வட்டாரத்திலும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல் சசிகலாவை வரவேற்றும் ஆதரித்தும் தென்மாவட்டத்தில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_520.jpg)
இந்நிலையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் குமரி அதிமுக முன்னாள் மா.செ.வுமான விஜயகுமார், தனது ட்விட்டர் பக்கத்தில் சசிகலா அதிமுக கொடி கட்டி சென்ற வாகனத்தைப் பதிவிட்டிருந்தார். இதற்கு பலர் லைக்கும் போட்டிருந்தனர். இதுவும் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயகுமாருக்கு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் அதிமுக மா.செ பதவிகள் அப்போது சசிகலாவின் தயவில்தான் கிடைத்தது. அதனால்தான் அவர் அந்த வாகனத்தைப் பதிவிட்டதாக எதிரணியினர் குற்றம் சாட்டினார்கள்.
இதுகுறித்து விஜயகுமாரிடம் கேட்டபோது, “ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அந்த வாகனத்தைப் பயன்படுத்தினார். அவர் மறைவுக்குப் பிறகு இப்போது அதிமுக கொடியுடன் அந்த வாகனத்தைப் பார்க்க முடிந்ததால்தான், ட்விட்டரில் அதைப் பதிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)