/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ashokkuar mp.jpg)
மாநிலங்களவையில் ராஜ்யசபா எம்.பி. நவநீதகிருஷ்ணன் வெளிப்படுத்திய ஆவேசம் இது -“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது.
நாங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதைவிட, தற்கொலை செய்துகொள்வோம்.”
டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தியின் கிண்டல் இது –
“சொன்னபடி நவநீதகிருஷ்ணன் இதுவரையிலும் தற்கொலை செய்யவில்லை. அவருடைய வாக்குறுதியை அவருக்கு நினைவூட்டும் வகையில், அவருக்காக விஷம் மற்றும் தூக்கு கயிறினை அளிப்பதற்குத் தயாராக இருக்கிறேன்.”
மாநிலங்களவையில் நான் கண்களை மூடிக்கொண்டிருந்தேன் என்று சொல்லாமல் சொல்வது போல், கிருஷ்ணகிரி எம்.பி. அசோக்குமார் அடித்த பல்டி இது -
“நவநீதகிருஷ்ணன் எம்.பி. அப்படி பேசியதை நான் பார்க்கல”
வரவர, அதிமுகவினர் பண்ணிவரும் காமெடிக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது! சிரித்து வைப்போம்!
Follow Us