"கொல்லைப்புறமாக ஆட்சி நடத்திய எடப்பாடிக்கு முதல்வரை பற்றி பேசத் தகுதியில்லை" - கோவை செல்வராஜ்

Coimbatore Selvaraj who left AIADMK talks about Edappadi Palaniswami

அதிமுகவில் இருந்து விலகியஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.

அதிமுகவில்ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த, கோவையில்மாவட்டச்செயலாளராக இருந்த கோவை செல்வராஜ்,கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோவைசெல்வராஜ், "கஷ்டப்படும் ஏழை எளியப் பெண்கள், கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள்எனப் பலதரப்பட்ட பெண்கள் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வேலைக்கு வருகிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் தினசரி ரூ.60 முதல் ரூ.70 வரை பேருந்துக் கட்டணம் மிச்சமாகிறது.இதனால் பெண்கள் மாதம் ரூ.1500 வரை சேமித்து வைக்கிறார்கள். அதனால் அவர்களின் ஆதரவு முதல்வர் ஸ்டாலினுக்கு எப்போதும்உண்டு.

இன்றைய தினம் வியாபாரிகளுக்கும்பொதுமக்களுக்கும் எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல், எந்தவிதமான பிரச்சனையும்இல்லாமல், மின்சாரத்தட்டுப்பாடின்றி தமிழகம் முழுவதும் மின்சாரத்தைவழங்கி,மின்சாரத்தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணன் செந்தில் பாலாஜி. 100 யூனிட் இலவச மின்சாரத்தைதிமுக அரசு நிறுத்திவிடும் என்று தவறாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். கடந்த ஆட்சியில் தங்கமணி அமைச்சராக இருக்கும் பொழுது 1000 விவசாயிகளுக்கு தான் இலவச மின்சாரம் கொடுத்தார்கள். ஆனால் இன்றைய தினம் ஒன்றரைலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திருக்கிறார்கள் முதல்வரும், மின்சாரத்துறை அமைச்சரும்.

இப்படி ஏராளமான திட்டங்களைச் செய்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டமுதல்வர் ஸ்டாலினை பற்றிமக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், காலிலே விழுந்து கொல்லைப்புறமாக ஆட்சியை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி பேசத்தகுதி கிடையாது. அதிமுக கட்சி தற்போது கம்பெனி ஆகிவிட்டது. உண்மையான அதிமுகதொண்டர்கள் அந்த சாதிக்கட்சியைஒழிக்க வேண்டும்.மதவாதக் கட்சியைஒழிக்க வேண்டும். விரைவில் கோவை மாவட்ட அதிமுகவில் இருந்து ஒரு 5 ஆயிரம் பேர் திமுகவில் இணைக்கவுள்ளோம்.தொடர்ந்து திமுக ஆட்சி அமைய செயல்படுவோம்” எனத்தெரிவித்துள்ளார்.

admk senthilbalaji
இதையும் படியுங்கள்
Subscribe