Advertisment

கோவை கிழக்கு... கோவை மேற்கு... பொறுப்பாளர்களை அறிவித்த திமுக

கோவை மாநகர் கிழக்கு, கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது.

Advertisment

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை மாநகர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்படுகிறது. 57 வார்டுகளுடன் செயல்பட்டு வரும் தற்போதைய கோவை மாநகர் மாவட்டத்தில் மேலும் 14 வார்டுகள் புதிதாக சேர்ப்பட்டு 71 வார்டுகள் கொண்டு கோவை மாநபர் கிழக்கு மாவட்டம் அமையும்.

 - MLA

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கோவை தெற்கு தொகுதி 19 வார்டு, சிங்காநல்லூர் தொகுதி 19 வார்டு, கோவை வடக்கு தொகுதி 19 வார்டு, தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதிக் கழகம் 7 வார்டு, குனியமுத்தூர் பகுதி கழகம் 7 வார்டு ஆகிய 71 வார்டுகள் கொண்டதாக புதிய கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் அமைவதோடு அதன் பொறுப்பாளராக நா.கார்த்திக் எம்எல்ஏ தொடர்ந்து செயல்படுவார்.

கவுண்டம்பாளையம் பகுதி 11 வார்டுகள், சரவணம்பட்டி பகுதி 11 வார்டுகள், குறிச்சி பகுதி 7 வார்டுகள் ஆகிய 29 வார்டுகள் கொண்டதாக கோவை மாநகர் மேற்கு மாவட்டம் அமைவதோடு இம்மாவட்டக் கழகத்தின் பொறுப்பாளராக மு.முத்துசாமி நியமிக்கப்படுகிறார். இந்த இரண்டு மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதி, வட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

MLA n.karthik Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe