Co-operative Union Amendment Bill ... AIADMK walkout!

Advertisment

கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாகவே முன்பு நடந்ததை போல் சென்னை கலைவாணர் அரங்கில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 5 ஆம் தேதி துவங்கியது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் வரும் 7 ஆம் தேதி இன்று வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான நேற்று தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவையின் கேள்வி நேரம் நேரலையாக ஒளிபரப்பாகியது.அதேபோல் இன்றும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஒரு பகுதியாக முதல்வரின் பதிலுரை இருக்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று சட்டமன்றத்தில் சட்டப்பேரவை விதி எண் 110 கீழ் கூட்டுறவுச் சங்க சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். புதிய சட்டத்திருத்தத்தின் படி தமிழகத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் கலைக்கப்படும். கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் பதவி காலம் 5 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக குறையும். இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.