Advertisment

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதா? மத்திய அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

pr pandiyan

Advertisment

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுபாட்டில் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மத்திய அமைச்சரவை இன்று டெல்லியில் கூடி இந்தியா முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுபாட்டில் கொண்டு சென்று கண்கானிக்கப்படும் என கொள்கை முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது வன்மையாக கண்டிக்கத்தக்கது உடனடியாக திரும்ப பெற வேண்டும்.கூட்டுறவு வங்கிகள் மாநில அரசுகளின் நிர்வாக பட்டியலில் உள்ளது. தமிழ் நாட்டில் விவசாயிகளின் பங்களிப்பில் விவசாயிகள் கொண்ட அமைப்பின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் நபார்டு வங்கியின் மூலம் நிதி உதவி பெற்றாலும் அதற்க்கான அனைத்து வங்கி உத்திரவாதங்களையும் மாநில அரசு பொருப்பேற்கிறது. வட்டி உள்ளிட்ட அனைத்து நிதிச்சுமைகளையும் மாநில அரசுகளே ஏற்றுக் கொள்கிறது.

பணியாளர்கள் மற்றும் நிர்வாக சிலவினங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விவசாயிகளின் வருவாய் பங்கு தொகை பங்களிப்புடன் மாநில கூட்டுறவு துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. ஆண்டுதோறும் கடன் கொள்கைகளை திட்டமிடுவதும், விவசாயிகளுக்கு உரிய காலத்தில் வட்டி சலுகையுடன் கடன் வழங்குவதையும் விவசாயிகளே திட்டமிட்டு செயல்படுத்துகிற ஒரு ஜனநாயக அமைப்பு மற்றுமின்றி கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறது.

Advertisment

ஆண்டுதோறும் இயற்கை சீற்றங்களால் விவசாயம் பாதிக்கப்படு வருவாய் இழப்பு ஏற்படுமேயானால் கடன் குறித்த நிவாரணத்தை மாநில அரசுகளே ஏற்றுக்கொள்கிறது. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உத்திரவாதப் படுத்தப்படுகிறது. எனவே கூட்டுறவே நாட்டுயர்வு என்ற வரலாற்று புகழுக்கு சொந்தமான கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதின் மூலம் மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் மட்டுமல்ல கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் செயலுமாகும். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணானது. கிராமப் பொருளாதார வளர்ச்சியை முற்றிலும் முடக்கும் செயல்.

வங்கிகளில் பன்னாட்டு மூதலீடுகளுக்கு அனுமதி வழங்கி உள்ள நிலையில், அதன் மூலம் உலக பெரும் முதலாளிகளிடம் விவசாயிகளை அடிமைப்படுத்தும்.இது குறித்து தமிழக அரசு தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுபாட்டில் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என கொள்கை முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இதனை ஏற்க மறுக்கும் பட்சத்தில் விரைவில் தீவிரமான போராட்டத்தில் களமிறங்குவோம் என எச்சரிக்கிறேன் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

reservebank Co-operative Bank Farmers pr pandiyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe