cm stalin question Does PM approved Maharashtra Chief Minister NEP

மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்றாவது மொழியாக இந்தி மட்டுமே கற்பிக்கப்படுகிறது என்று அந்த மாநிலத்தின் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவிக்கிறார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், "மூன்றாவது மொழியாக இந்தியைத் திணித்ததற்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தற்போது மாநிலத்தில் மராத்தி மட்டுமே கட்டாயம் என்று கூறுகிறார். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக பொதுமக்கள் பரவலாக கண்டனம் தெரிவித்ததற்கு இது அவரது பதட்டத்தின் தெளிவான வெளிப்பாடாகும்.

Advertisment

இது குறித்து பிரதமரும் மத்திய கல்வி அமைச்சரும் தெளிவுபடுத்த வேண்டும்:

* தேசிய கல்விக் கொள்கையின் (#NEP) கீழ் மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற அவரது நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா?

* அப்படியானால், தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாவது மொழியை கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உறுதிப்படுத்தும் தெளிவான உத்தரவை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பிறப்பிக்குமா?

Advertisment

* கட்டாய மூன்றாவது மொழியைக் கற்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழகத்திற்கு நியாயமற்ற முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட ரூ.2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா?" என்கிற கேள்விகளை கேட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த கேள்வி தற்போது தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.